Sevvai Dosham (செவ்வாய் தோஷம்)
ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் இடத்தை வைத்து செவ்வாய் தோஷம் (Chevvai dosham) பற்றி அறிய முடியும். செவ்வாய் முதல், இரண்டாவது, நான்காம், ஏழாவது, எட்டு, அல்லது பன்னிரண்டாம் வீடுகளில் இருக்கும்போது, அதுவே Sevvai Dosham (Meaning செவ்வாய் தோஷம் in tamil) என்று அழைக்கப்படுகிறது. செவ்வாய் கிரகம் செவ்வாய் தோஷத்தில் ஆதிக்கம் செலுத்தும். ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் ஒரு தீய கிரகம் என்பதால், அது தோஷமாக கருதப்படுகிறது. தீங்கு விளைவிக்கும் பாவ கிரகம் செவ்வாய் மற்ற பாவ கிரகங்களுடன் தொடர்புடையதாக இருந்தால், அது மிகவும் தீவிரமான தோஷமாக மாறுகிறது.
செவ்வாய் கிரகம் என்றால் என்ன?
செவ்வாய் தோஷத்தை புரிந்து கொள்ள, செவ்வாய் கிரகத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். செவ்வாய் ஒரு ஆக்ரோஷமான, வலுவான கிரகம். செவ்வாய் தன் ஒரு முழு சுற்றுப்பாதையை முடிக்க 1 வருடம், 321 நாட்கள் மற்றும் 32 மணிநேரம் ஆகும். செவ்வாய் கிரகம் வான அமைச்சரவையில் சிறந்த போர்த்திறன் கொண்ட தலைமை தளபதியாக செயல்படுகிறது. இரசாயனங்கள், ஆயுதங்கள், போர் ஆக்கிரமிப்பு மற்றும் போர் ஆற்றல், அணு பிளவு / இணைவு எதிர்வினைகளை செவ்வாய் கிரகம் குறிக்கிறது. செவ்வாய் தன் எதிரிகளை அதிகம் யோசிக்காமல் அல்லது வியூகம் அமைக்காமல் தாக்கக்கூடும். செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் பெற்ற ஜாதகம், மேலே கூறிய அனைத்து பண்புகளையும் பெற்றிருக்கும். செவ்வாய் உடலின் சக்தியைக் குறிக்கிறது, மன தைரியம் மற்றும் வாழ்வின் லட்சியத்தை குறிக்கிறது. முப்பரிமாண வாழ்வில், செவ்வாய் ஆதிக்க பெற்ற ஜாதகர்கள், அதன் நியாயமற்ற, பகுத்தறிவற்ற மற்றும் சகிப்புத்தன்மையற்ற பண்புகளை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.
Chevvai Dosham Calculator (செவ்வாய் தோஷம் கால்குலேட்டர்)
செவ்வாய் தோஷம் பல இந்து திருமணங்களை தீர்மானிக்கும் காரணியாகும். செவ்வாய் தோஷம் பற்றிய பல கட்டுக்கதைகள் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்களுக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்பதை அறிய, நீங்கள் உண்மையிலேயே தோஷத்தால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா என்பதை அறிய எங்கள் Sevvai Dosham கால்குலேட்டரைப் பயன்படுத்தலாம். செவ்வாய் கிரகத்தின் இருப்பிடம் மற்றும் தோஷத்திற்கான ரத்து விதிகளின் அடிப்படையில் செவ்வாய் தோஷத்தை தீர்மானிக்க எங்கள் Online Sevvai Dosham Calculator in tamil,malayalam,kannada உதவும். உங்கள் பிறந்த தேதி (date of birth) மற்றும் பிறந்த இடத்தைப் பயன்படுத்தி உங்களுக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா (chevvai dosham check) என தெரிந்து கொள்ளலாம்.
செவ்வாய் தோஷ விளைவுகள் (Sevvai Dosham Effects)
ஜாதகத்தில் எந்த வீட்டில் செவ்வாய் அமைந்திருப்பதன் அடிப்படையில் தோஷ விளைவுகள்மாறுபடும்.
முதல் வீட்டில் செவ்வாய்- 60% தோஷம்
இந்த வீட்டில் செவ்வாய் ஒரு நபரின் தன்மை, நடத்தை மற்றும் மனநிலையை பாதிக்கிறது. அவரது தனிப்பட்ட தன்மையை முழுமையாக செவ்வாய் ஆட்சி
செய்கின்றது. திருமணத்தை தாமதப்படுத்தலாம். பிடிவாத இயல்பு, நியாயமற்ற கோப குணங்களை கொடுக்கிறது.
இரண்டாவது வீட்டில் செவ்வாய்- 60% தோஷம்
செவ்வாய் இரண்டாவது வீட்டில் இருந்தால் உடல்நலப் பிரச்சினைகள், பணப் பிரச்சினைகள், குடும்பப் பிரச்சினைகள் மற்றும் திருமணத்தில் சீரற்ற தாமதங்களை எதிர்கொள்ள வைக்கிறார்.
நான்காம் வீட்டில் செவ்வாய்- 70% தோஷம்
நான்காம் வீட்டில் செவ்வாய் உட்கார்ந்திருக்கும் போது தாய்வழி உறவுகளில் உள்ள சிக்கல்கள், தாய் அல்லது பிற பெண்களுடனான மன சவால்கள், குடும்பத்தில் பற்றின்மை, இல்லற வாழ்வில் பகுத்தறிவற்ற மனநிலை, குடும்பத்தில் ஒற்றுமையின்மை போன்ற சவால்கள் தோன்றுகின்றன.
ஏழாவது வீட்டில் செவ்வாய் - 100% தோஷம்
ஏழாம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் திருமண தடைகள் ஏற்படலாம். குழந்தைப்பேறு பிரச்சனைகள் அல்லது மகப்பேறு தொல்லைகள் போன்றவையும் ஏற்படலாம். தேவையற்ற காரணங்களுக்காக திருமணத்தை தாமதப்படுத்தலாம். செவ்வாய் இந்த வீட்டில் குழப்பமான குழந்தைப் பருவம், கெட்ட நண்பர்கள், காதல் முறிவுகள் மற்றும் பல தோல்வியுற்ற திருமணங்கள் போன்ற மன இன்னல்களை தருகிறது.
எட்டாம் வீட்டில் செவ்வாய்- 100% தோஷம்
இந்த வீட்டில் செவ்வாய், ஒரு நபரின் வாழ்க்கைத் துணையின் ஆயுளைப் பாதிக்கும், திருமண துணையின் மனநிலையை காயப்படுத்தும். அவரின் திருமண துணை அவரிடம் இருந்து பல விஷயங்களை மறைக்கலாம். திடீர் மரணம், விபத்து அல்லது காரணமில்லாத உடல் நலக்குறைவு போன்ற கசப்பான விளைவுகளை அளிக்கிறது.
பன்னிரண்டாம் வீட்டில் செவ்வாய்- 50% தோஷம்
பன்னிரண்டாம் வீடு பேறு , உடலுறவு , மனம் போன்ற விஷயங்களை ஆளுகிறது . இந்த வீட்டில் செவ்வாய் இருந்தால் மேற்குறித்த அம்சங்கள் பாதிக்கப்படுகிறது. திருமணத்தில் அதிருப்தி, ஒற்றுமையின்மை , மறைமுக எதிர்ப்பு, பிள்ளைகளிடம் அன்பில்லாமை ஆகியவையும் ஏற்படும்
ராகு, கேது, செவ்வாய் தோஷம்- 200% தோஷம்
முதல், இரண்டாவது, நான்காவது, பன்னிரண்டாவது வீட்டில் செவ்வாய் மற்றும் ராகு அல்லது கேது அல்லது சனியுடன் இருந்தால், அந்த செவ்வாய் தோஷம் இரட்டிப்பாகிறது. இந்த தோஷம் பல சவால்களை தருகிறது. திருமண வாழ்வை சிரமப்படுத்துகிறது.
ராகு, கேது, சனி , செவ்வாய் தோஷம்- 300% தோஷம்
ஏழாவது அல்லது எட்டாவது வீட்டில் செவ்வாய் மற்றும் ராகு, கேது , சனி இவையுள் ஏதேனும் இரு பாவ கிரங்கங்கள் இருந்தால், மும்மடங்கு செவ்வாய் தோஷம் அதிகரிக்கும். குறைந்த வாழ்நாள், பண கஷ்டங்கள், உடல்நிலை மற்றும் மனநிலை தடைகளை செவ்வாய் தருகிறது
செவ்வாய் தோஷம் திருமணம் (Sevvai Dosham Marriage)
செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகர் எப்பொழுதும் அதே தோஷம் உள்ள ஒருவரை மணக்க வேண்டிய அவசியமில்லை. Can i marry chevvai dosham girl? வேத ஜோதிடத்தின் படி, சில கிரக சேர்க்கைகளைக் கொண்ட ஒரு செவ்வாய் தோஷம் நபர், தோஷம் அல்லாத ஒருவரை திருமணம் செய்யலாம். வேத நூல்களில் சில பரிகாரங்கள் உள்ளன. அவற்றை நிறைவேற்றிவிட்டு திருமணத்தினை நடத்தலாம். மேலும் செவ்வாய் தோஷம் உள்ள ஒருவர் சிறந்த யோக ஜாதகம் கொண்ட தோஷம் அல்லாதவரை மணக்கலாம். சில நேரங்களில் தோஷம் இல்லாதவரின் ஜாதக யோக கிரங்ககள் செவ்வாய் தோஷம் உள்ள ஒருவரின் தோஷம் நிவர்த்தி செய்யும். அவ்வாறான சூழ்நிலையில் கூட தோஷம் உள்ள ஒருவர் தோஷமற்ற ஒருவரை திருமணம் செய்யலாம். இவை அனைத்தும் ஒருவரது ஜாதகத்தை முழுமையாக ஆய்ந்து, ஆராய்ந்து பார்த்து செய்யவேண்டும்
பூரண அல்லது முழுமையான செவ்வாய் தோஷம் (200%, 300% தோஷம்) உள்ள ஒருவர் மட்டுமே அதே தோஷம் உள்ள மற்றொருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
செவ்வாய் தோஷம் பரிகாரம்
செவ்வாய் தோஷ பரிகாரங்களை (Chevvai Dosham Pariharam) திருமணத்திற்கு முன்பும் திருமணத்திற்கு பிறகும் செய்ய வேண்டும்
திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் உள்ள பட்சத்தில், தோஷ நபர் முதலில் ஒரு வாழை மரத்தையோ அல்லது அரச மரத்தையோ மணக்க வேண்டும். மரத்தை மணந்து பின் அந்த மரத்தினை வெட்டி தன்னுடைய பாவங்களை தீர்க்க வேண்டும். இதுவே அவரின் முதல் திருமணமாக கருதப்டுகிறது. அவர் இப்பொழுது மற்றொரு நபரை மணப்பது இரண்டாம் திருமணமாக கணக்கிடப்படுகிறது. ஏனெனில், இரண்டாம் திருமணம், ஒன்பதாம் மற்றும் பதினோராம் வீட்டை தொடர்புடையது, செவ்வாய் தோஷத்தில் உள்ள செவ்வாய், இவ்விரண்டு வீடுகளை பாதிக்காது. இக்காரணத்தால் ஜாதகத்தில் தோஷம் கொண்டவர், இந்த பரிகாரத்தில் முதலில் ஒரு மரத்தினையோ, ஒரு கலசத்தையோ அல்லது ஒரு விஷ்ணு சிலையோ (தோஷம் உள்ள பெண்) மணக்கிறார்.
யாருக்குக்கெல்லாம் செவ்வாய் தோஷம் கிடையாது?
ஜோதிட குறிப்பின் படி, லக்கினம், சந்திரன், மற்றும் சுக்கிரன் ஆகியவைகளுக்கு 2,4,6,7,8,12 இடங்களில் செவ்வாய் அமைந்திருந்தாலும், கீழ்க்கண்ட கிரக அமைப்பு இருந்தால் அது செவ்வாய் தோஷம் இல்லை. (Chevvai Dosham exceptions in tamil)
இதனடிப்படையில் பார்த்து மட்டுமே செவ்வாய் தோஷம் உண்டா இல்லையா என்று தீர்மானிக்க முடியும்.
Frequently Asked Questions
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் 1,2, 4, 7, 8 அல்லது 12 ஆம் வீட்டில் இருக்கும் போது செவ்வாய் தோஷமாக (sevvai dosham) கருதப்படுகிறது
வேத நூல்களில் சில பரிகாரங்கள் உள்ளன, அவற்றை நிறைவேற்றிவிட்டு you can marry a chevvai dosham girl.
எங்கள் ஆன்லைன் கால்குலேட்டரில் பிறந்த தேதி, நேரம் மற்றும் பிறந்த இடத்தைப் பூர்த்தி செய்து உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்று நீங்கள் எளிதாக பார்க்கலாம்